பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்திய உணவக மேலாளர் மீது வழக்குப்பதிவு
Coimbatore News- பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்திய உணவக மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Coimbatore News, Coimbatore News Today- கோவையில் ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் உணவகம் சார்பில் கடந்த புதன்கிழமை பிரியாணி போட்டி ஒன்று நடத்தப்பட்டது.
கடை விளம்பரத்திற்காக அரை மணி நேரத்தில் ஆறு பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் , ஐந்து பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் பரிசு, மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் பரிசும், என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. போட்டியில் பங்கேற்பதற்காக கோவை மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.
இதனால் கோவை மாநகரின் முக்கிய பகுதியிலான அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், போன்றவை இணைக்க கூடிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் எவ்வித முன் அனுமதியும் இன்றி பொது இடத்தில் மக்களை கூட்டி போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பந்தைய சாலை காவல் நிலையம் ஆய்வாளர் அர்ஜுன் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.