பெண் மருத்துவரை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய இ.எஸ்.ஐ மருத்துவர் மீது வழக்கு

திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து அவரை ஏமாற்றிய மருத்துவர் ஷயாம் சுந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.;

Update: 2024-07-21 01:45 GMT

அனைத்து மகளிர் காவல் நிலையம்

கோவையைச் சேர்ந்த பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர், கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர், நான் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ் படித்து விட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றினேன். அங்கு மருத்துவராக பணியாற்றிய ஷயாம் சுந்தர் என்பவர் உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்பொழுது அவருக்கு திருமண ஆகவில்லை என்றும் அவரை காதலித்ததாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார்.

மேலும் அவர் அவரது காரில் ஊட்டிக்கு பல்வேறு இடங்களில் அழைத்துச் சென்று உள்ளார். அவர்கள் இருவரும் காரில் நெருக்கமாக இருந்து உள்ளனர். கணவராக வரப்போகிறவர் என்பதால் உல்லாசம் அனுபவிக்க அவர் அனுமதித்து உள்ளார். பின்னர் அவர் கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பணி மாறுதல் ஆகி வந்து விட்டார். அந்த பெண் மருத்துவர் பயிற்சியை முடித்துக் கொண்டு கோவை திரும்பினார். கோவை வந்ததும் ஷயாம் சுந்தர் அடிக்கடி அவரை காரில் வெளியே அழைத்துச் செல்வார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி கோவையில் ஒரு ஹோட்டலில் கணவன் - மனைவி என்று பதிவேட்டில் பதிவு செய்து அறை எடுத்து அவரிடம் உல்லாசமாக இருந்தார்.

இதை தொடர்ந்து ஷயாம் சுந்தரிடம் எப்பொழுதும் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்றும் அவர் வீட்டிற்கு வந்து பெண் கேளுங்கள் என்றும் கூறி உள்ளார். அதன் பிறகு அந்த பெண் மருத்துவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். அதன் பிறகு தான் ஷயாம் சுந்தர்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி ஒரு ஆண் குழந்தை இருப்பதில் தெரிய வந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி சுங்கத்தில் உள்ள ஷியாம் சுந்தர் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி உள்ளார். அங்கு இருந்த ஷயாம் சுந்தரின் தாய், அக்கா அவரது மாமா ஆகியோர் அவரைத் திட்டி அனுப்பிவிட்டனர்.

திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து அவரை ஏமாற்றி இ.எஸ்.ஐ மருத்துவமனையின் மருத்துவர் ஷயாம் சுந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார். அதன் பேரில் கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் ஷயாம் சுந்தர் மீது நம்பிக்கை மோசடி, பொது இடத்தில் ஆபாச செயல் புரிதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News