கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு

Case Against Coimbatore Female Driver கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளார்.;

Update: 2024-02-07 04:00 GMT

ஓட்டுநர் ஷர்மிளா

Case Against Coimbatore Female Driver 

கோவை வடவள்ளி பகுதியை சார்ந்தவர் ஷர்மிளா. 23 வயதான இவர், கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்து ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். கனிமொழி பயணம் செய்த ஒரு மணி நேரத்தில் தன்னைப் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணன் என்பவர், வேலையை விட்டு நீக்கியதாக ஷர்மிளா தெரிவித்தார். ஷர்மிளாவே வேலையை ராஜினாமா செய்ததாக பேருந்து உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பணியை விட்டு கால் டாக்ஸி ஓட்டப்போவதாக ஷர்முளா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஹர்மிளாவிற்கு 16 இலட்ச ரூபாய் மதிப்பிலான புதிய கார் ஒன்றை வாங்கி தந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கனூர் பகுதியில் ஒரு பெண் காவலர் வாகனங்களை வழிமறித்து இலஞ்சம் வாங்குவதாகவும், அவர் மீது காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷர்மிளா வெளியிட்டு இருந்தார். 

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளாராக பணி புரிந்து வரும் ராஜேஸ்வரி என்பவர் ஷர்மிளா மீது சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த 2 ம் தேதியன்று தான் சங்கனூர் சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்த போது, காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேள்வி கேட்டதால் தன்னை வீடியோ எடுத்து ஷர்மிளா மிரட்டல் விடுத்தாகவும், பின்னர் ஷர்மிளாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பியதாகவும் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் ஷர்மிளா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News