பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்

கோயம்புத்தூர் பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி, 5 ஜி ேசவை வழங்க வேண்டும்

Update: 2023-08-01 05:30 GMT

பைல் படம்

கோயம்புத்தூர் பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி, 5 ஜி ேசவை வழங்க வேண்டும். பணப்பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும், கடந்த 2017-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய 15 சதவீதம் சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு கிளை தலைவர் தங்கமணி தலைமை  வகித்தார். முன்னதாக கிளை செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் சிவசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட உதவி செயலாளர் மனோகரன், சி.ஐ.டி.யு. போக்குவரத்து ஊழியர் சங்கத்தை சேர்ந்த சேதுராமன், உதவி கிளை தலைவர் ஜெயமணி, முன்னாள் அகில இந்திய உதவி பொருளாளர் பங்கஜவல்லி, முன்னாள் கிளை செயலாளர் சசிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்தியப் பொருளாதாரத்தின் பொதுவுடமைக் கால கட்டத்தில் பிஎஸ்என்எல் ஏறத்தாழ ஏகபோகத் தனி உரிமையாளராகத் திகழ்ந்து வந்தது. இந்தக் காலகட்டத்தில், நாட்டில் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் ஒரே நிறுவனமாக பிஎஸ்என்எல் விளங்கியது. (மும்பை மற்றும் புது தில்லியில் மட்டுமே எம்டிஎன்எல் தன் சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தது). அந்நாட்களில், திறமையற்று, செயற் குறைபாடுகளைக் கொண்டு, அதிகார மையங்கள் மிகுந்து மற்றும் அதிக அளவில் தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தால் பாதிப்புற்ற அரசு நிறுவனமாக பிஎஸ்என்எல் இயங்கி வந்தது. இதன் விளைவாக, ஒரு தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் சுமார் ஐந்து வருட காலம் காத்திருக்க நேர்ந்தது.1991ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் தாராளமயமான பிறகு, இந்த நிறுவனம் முதன்முறையாகப் போட்டியைச் சந்தித்தது. தனியார் சேவை வழங்குனர்களுடனான தீவிரமான போட்டியைச் சந்தித்த பின்னர் பிஎஸ்என்எல் தனது ஆற்றலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலானது.

இருப்பினும், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பரவலாக சரிநிகர் சமத்துவ வளர்ச்சியை அடைய, அரசு சேவை வழங்குனர்கள் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும் என்னும் அரசின் கொள்கையே பிஎஸ்என்எல்லின் இத்தகைய தாழ் நிலைக்குக் காரணம் என தொலைத் தொடர்பு வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இருப்பினும், இக்கொள்கையைச் செயற்படுத்துவதில் (அச்சமயம் தொலைத் தொடர்புப் பிரிவு என்பதாக இருந்த) இந்நிறுவனம் மிகப் பெரும் தோல்வியுற்றது மற்றும் உலகிலேயே மிகவும் குறைவான அளவில் தொடர்பிணைப்புகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா நலிவுற்றிருந்தது. தொலைத் தொடர்புப் பிரிவு தனியார்மயமான பிறகு, 2000 ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் தோன்றியது. அதன் பிறகு இந்நிறுவனத்தின் ஆற்றல் முன்னேற்றமடைந்துள்ளது. இருப்பினும், தனியார் துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இதன் செயலாற்றல் மிகவும் பின் தங்கியே உள்ளது.  இதர நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், முடிவெடுத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் இதன் செயற்பாடு மிகவும் தாமதமாகவே உள்ளது.


Tags:    

Similar News