கோவையில் நூல் வெளியீட்டு விழா

ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சுப்ரமணியன் எழுதிய அரசாட்சியில் மனசாட்சி எனும் நூல் வெளியீட்டு விழா;

Update: 2023-06-04 18:00 GMT

ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வெ. சுப்ரமணியன் எழுதிய அரசாட்சியில் மனசாட்சி எனும் நூல் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது

ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வெ. சுப்ரமணியன் எழுதிய அரசாட்சியில் மனசாட்சி எனும் நூல் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றி துணை ஆட்சியராக ஓய்வு பெற்றவர் வெ. சுப்ரமணியன்.கோவை மாவட்டத்தில் பணியாற்றும் போது , மலை வாழ் மக்கள், சிறுபான்மை சமுதாய மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெற்று ஓய்வு பெற்ற இவர் எழுதிய அரசாட்சியில் மனசாட்சி எனும் நூல் வெளியீட்டு விழா செல்வபுரம் மித்ரா கிளப் அரங்கில் நடைபெற்றது.

பாரதியார் பல்கலை கழக முன்னால் தமிழ்துறை தலைவர் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு சிறப்பு செயலாளர் மு. கருணாகரன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசியதாவது: கோவை மாவட்ட ஆட்சியராக தாழ் பணியாற்றிய காலத்தில் தோழர் சுப்ரமணியன் சிறப்பாக பணியாற்றியதாக குறிப்பட்ட அவர், இது போன்ற அரசு அலுவலர்கள் அரசுக்கு என்றுமே தேவை என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் பேசுகையில்,  துணை ஆட்சியராக ஓய்வு பெற்று தற்போது அரசாட்சியில் மனசாட்சி எனும் நூலை எழுதிய தோழர் வெ. சுப்ரமணியத்தற்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கோவை மாவட்டத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு வளர்ச்சியில் பாரபட்சம் காட்டாமல் அவரது பணி காலத்தில் செயல்பட்ட நேர்மையான சிந்தனைகளை நினைவு கூர்ந்து பகிர்ந்தி கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிர்வாகிகள் அபுதாகீர், கோட்டை செல்லப்பா, சுலைமான், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News