சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை:கேரளா அரசைக்கண்டித்து விவசாயிகள் தர்ணா

கேரளா அரசின் முயற்சியை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தர்ணா நடந்தது;

Update: 2023-04-26 10:00 GMT

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் பஸ் ஸ்டாண்டில் கேரளா அரசு பேருந்து முன்பு  போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினர் 

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசின் முயற்சியை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் பஸ் ஸ்டாண்டில் கேரளா அரசு பேருந்து முன்பு அனைத்து கட்சியினர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிற சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் அட்டப்பாடி கூலிகடவு-சித்தூர் சாலையில் நெல்லிபதி என்ற இடத்தில் கேரளா அரசு ஐந்து அடி உயரத்தில் தடுப்பணை கட்டி 90 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றது. மேலும் இரண்டு தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டு இருக்கின்றார்கள்

ஏற்கெனவே சிறுவாணி அணையில் மழை காலங்களில் முழு கொள்ளளவை 52 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க விடாமல் கேரளா அரசு தடுத்து வருகிறது. கோடை காலத்தில் வரக் கூடிய தண்ணீரையும் சிறுவாணி அணைக்கு வராமல் தற்போது தடுப்பணைகளை கட்டி வருகிறது.

கேரளா அரசு உடனடியாக இந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிட கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோவை காந்திபுரம், திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு கேரள அரசின் பயணிகள் பேருந்து முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News