வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகின்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அங்கக வேளாண்மை கட்டண பயிற்சி நடைபெற உள்ளது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகின்ற ஆகஸ்ட் 7 -ஆம் தேதி அங்கக வேளாண்மை கட்டண பயிற்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பயிற்சியில் அங்கக வேளாண்மையின் அடிப்படை நெறிமுறைகள், அங்கக மேலாண்மை, அங்கக பூச்சி நோய் மேலாண்மை, அங்கக உன் நிர்வாகம் மற்றும் அங்ககச் சான்றிதழ், அங்கசு இடு பொருட்கள் தயாரிப்பு, அங்கக விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவோடு கூடிய செயல் விளக்கங்களும் நடைபெறும். இந்த பயிற்சிக்கான கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 750 ஆகும். விருப்பமுள்ள விவசாயிகள் 9486734404 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். நேரடியாகவும் வந்தும் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்லை துறையில் உள்ள அங்கக பண்ணைத் திட்டங்கள்:
நகரத்தில் உள்ள பல வீடுகள், மருத்துவமனைகளில் அங்கக உணவுகளை சீராக வழங்கவும்,நச்சுத் தன்மையில்லாத பழங்கள்,காய்கறிகள் வழங்குவதற்கும் தேவை அதிகரித்துள்ளது.பெரிய நகரங்களில் உள்ள சில்லறை வியாபாரிகள் மற்றும் காய்கறிகளை மத்திய கிழக்கு / தூர கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அங்கக விளைப் பொருட்களை வருடம் முழுவதும் வழங்குவதற்கு தேவைப்படுகிறது. ஈரோடு, திருநெல்வேலி, சிவகங்கை, தோட்டக்கலை பண்ணை அமைப்புகளாக மாற்றப்பட்டு உள்ளது. அபிடா நறுமணப் பயிர்கள் வாரியம் மற்றும் லுயேசிஸ் (தன்னார்வ தொண்டு நிறுவனம்) உடன் இணைந்து அங்ககப் பண்ணை சான்றிதழ் பெற்றுள்ளது.
உலக வணிக சங்கமும் நன்னெறி வேளாண் முறைகள் நன்னெறி தயாரிப்பு முறைகளுக்கான விதிமுறைகளை உருவாக்கி உள்ளது.நீலகிரி,சத்தியமங்கலம்,சிவகங்கை,திருநெல்வேலி,தேனியில் அங்கக பண்ணைகளை உருவாக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் இண்டோசெர்ட்,ஸ்கால், இப்போயம் போன்ற நிறுவனங்களால் சான்றிதழ் பெறலாம்.ஆகவே,1400 ஹெக்டர் அங்கக தோட்டங்கள்,42 மண்புழு வளர்ப்பு பிரிவுகள்,2005-06 க்கான அங்கக சான்றிதழ் பெறவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அங்கக உற்பத்தியாளர்களுக்கு,நன்நெறி வேளாண் முறைகள், எஸ்.பி.எஸ் பற்றி பயிற்சி அளிக்கப் படுகிறது.தற்பொழுது,உற்பத்தியாளரையும், சில்லறை பிரிவையும் இணைக்க எந்த விதமான நிறுவன அமைப்பும் இல்லை.மாவட்ட அளவிலான கொள்முதல் மையம்,நகரப் பகுதியில் சில்லறை விற்பனை மையங்கள் தமிழ்நாடு தோட்டக்கலை விளைபொருட்கள் கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு 2.76 இலட்சமாகும்.