கேரளா அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு
பெரியார் திராவிடர் கழகத்தினர் 64 பேர் மீது கோவை மாநகர போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்;
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளா அரசை கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் கேரள பேருந்தை மறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு ராமகிருஷ்ணன், நேருதாஸ், கணபதி செல்வராஜ், அர்ஜுன் தாஸ், உட்பட 64 பேர் மீது காட்டூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் உள்ள வள்ளியம்மை பேக்கரி முன்பாக நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் என்பவர் கண்டன உரையாற்றினார். பொதுமக்கள் மத்தியில் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில், அவர் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த உக்கடம் காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.