சென்னையில் நடிகர், நடிகைகள் விறு, விறு வாக்கு பதிவு

சென்னையில் நடிகர்கள், நடிகைகள் காலையிலேயே, வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்கினை பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

Update: 2021-04-06 12:00 GMT

திரை நட்சத்திரங்கள் பலரும் காலை முதலே வாக்களித்து வருகின்றனர்.  அவரவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குசாவடியில் முககவசம் அணிந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாக்களித்தார்.   நடிகர் விஜய், அஜித், ரஜினி காந்த், சிம்பு, அர்ஜூன், ஜெயம் ரவி, ரம்யா பாண்டியன், மகேந்திரன், எஸ்.வி.சேகர், சங்கீதா, கிரீஸ், ஜனனி ஐயர், பிரியா பவானி சங்கர், திரிஷா, ரோகிணி, வருண் ஐ.பி.எஸ். அதிகாரி, நடிகை ரேஷ்மா, கீர்த்தி, பிக்பாஸ் ஆரி, இயக்குனர் ரவி குமார், ரித்விகா உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து ஜனநாயக கடமையையாற்றினர்.

வாக்களித்த நடிகர்கள், நடிகைகள் வாக்களித்த விரல்களில் உள்ள மையோடு தங்கள் படங்களை  முகநூல்களிலும், சமுக வலைதளங்களிலும் பதிவிட்டு, வாக்களிப்பதன் அவசியத்தை ரசிகர்களுக்கு உணர்த்தினர்.

Tags:    

Similar News