திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட ரகுபதி வெற்றிப் பெற்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக எஸ் ரகுபதி போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக வைரமுத்து போட்டியிட்டார். ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 799 வாக்குகள் பதிவானது.
இதில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ் ரகுபதி 66 ஆயிரத்து 433 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வைரமுத்து 65 ஆயிரத்து 516 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் திமுக வேட்பாளர் ரகுபதி 918 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.