அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காஙகிஸ் கட்சி வேட்பாளர் எஸ்.டி,ராமச்சந்திரன் வெற்றிப் பெற்றார்.;
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ் டி ராமச்சந்திரன் போட்டியிட்டார். அதிமுக சார்பாக ராஜநாயகம் போட்டியிட்டார். ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 396 வாக்குகள் பதிவானது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட எஸ்டி ராமச்சந்திரன் 79 ஆயிரத்து 36 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 49 ஆயிரத்து 342 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் 29 ஆயிரத்து 694 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.