கோவை கலெக்டர், போலீஸ் கமிஷ்னர் மாற்றம் : தேர்தல் ஆணையம் அதிரடி

கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி, மாநகர போலீஸ் கமிஷ்னர் சுமித் சரண் ஆகியோரை திடீரென பணியிடை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-03-24 19:45 GMT

கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி, மாநகர போலீஸ் கமிஷ்னர் சுமித் சரண் ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தது, இதனையடுத்து தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட புதிய கலெக்டராக எஸ்.நாகராஜன், மாநகர போலீஸ் கமிஷ்னராக டேவிட்சன் தேவாசீர்வாதம்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags:    

Similar News