நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் :போலீஸாருக்கு அறிவுரை வழங்கிய டிஐஜி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் :போலீஸாருக்கு  அறிவுரை வழங்கிய டிஐஜி

வேலூர் சரக காவல்துறை டிஐஜி ஆனிவிஜயா

திருவண்ணாமலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு டிஐஜி அறிவுரை வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் வருகின்ற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

வேலூர் சரக காவல்துறை டிஐஜி ஆனிவிஜயா தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார், திருவண்ணாமலை, செய்யாறு, போளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்த அறிவுரைகளை வழங்கினார்.மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 238 ஊர்க்காவல் படையினர் உட்பட 1250 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story