திருவண்ணாமலையில் வருகிற 22ம் தேதி அருணகிரிநாதர் அவதார நல்விழா

திருவண்ணாமலையில் வருகிற 22ம் தேதி அருணகிரிநாதர் அவதார நல்விழா

அருளாளர் அருணகிரி நாதர்

திருவண்ணாமலையில் வருகின்ற 22 ஆம் தேதி அருளாளர் அருணகிரி நாதர் அவதார நல்விழா நடைபெற உள்ளது

திருப்புகழைப் பாட, பாட வாய் மணக்கும் என்பார்கள். அந்த திருப்புகழ் பிறந்த இடம் திருவண்ணாமலை. திருப்புகழ் பாடல்களைப் பாடியவர் அருணகிரி நாதர்.

இவர் சுமார் 167 ஆலயங்களுக்கு சென்று முருகன் மீது பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருப்புகழ் ஆக உள்ளது. அருணகிரிநாதர் சுமார் 16 ஆயிரம் பாடல்களை முருகன் மீது பாடினார் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது 1328 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன

நமக்கு கிடைத்துள்ள 1307 திருப்புகழ் பாடல்களில் 1008 சந்த வகைகள் இருப்பதாக ஆராய்ந்து கண்டு பிடித்துள்ளனர். அவை கலைப் பொக்கிஷமாக போற்றப்படுகின்றன.

திருவண்ணாமலையின் அடையாளமாக திருவண்ணாமலைக்கு மேலும் பெருமை சேர்த்தவர் அருணகிரிநாதர்.

அவருக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சுமார் ரூபாய் 1. 33 கோடியில் அருணகிரிநாதர் மணிமண்டபம் கட்டப்பட்டது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாகவும் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை அமைப்பினரால் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையின் மூலமாகவும் மிகப்பிரமாண்டமான அருணகிரிநாதர் மணிமண்டபம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் திருப்புகழ் சொற்பொழிவுகள் , சிறப்பு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன.

அவதார நல்விழா

இந்நிலையில் வருகின்ற 22 ஆம் தேதி சனிக்கிழமை அருளாளர் அருணகிரி நாதர் அவதார நல்விழா கிரிவலப் பாதையில் உள்ள அருணகிரிநாதர் மணி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி அளவில் மங்கள இசை மற்றும் கயிலாய வாத்தியம் இசைக்க குமர கோவிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து அருணகிரிநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

பகல் 12 மணி அளவில் மகா தீபாராதனை அன்னதானம் நடைபெறும்.

மாலை 5 மணி அளவில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சியில் மணிமண்டப தலைவர் சின்னராசு தலைமையில்

ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரம நிர்வாகி லாயர் சந்திரமோகன், அரிமா சங்க ஆளுநர் அன்பரசு ஆகியோர் முன்னிலையில்

“திருப்பம் தந்த திரும்புகழ்” என்ற தலைப்பில் முனைவர் ராமு அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியும், கோவை ரஞ்சனி ராம்குமார் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பழனிராஜ் எழுதிய “திருவண்ணாமலை நினைவு இழைகளால் நெய்த வரலாறு”

என்னும் ஆன்மீக நூலினை ஓய்வு பெற்ற நீதிபதி சேது முருக பூபதி அவர்கள் தலைமையில் ஆகாஷ் ஹோட்டல் உரிமையாளர் முத்துகிருஷ்ணன் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

மேலும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், மீனாட்சி சுந்தரம், கோமதி குணசேகரன், பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் அறங்காவலர் குழுவினரும் அருளாளர் அருணகிரிநாதர் திருக்கோயில் நிர்வாக சபை செயலாளர் அமரேசன் மற்றும் பொருளாளர் தனுசு, உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story