சைத்தான் சொன்னான்.. நான் செய்தேன் - பகீர் கிளப்பிய நெல்லை கணவர்!

சைத்தான் சொன்னான்.. நான் செய்தேன் - பகீர் கிளப்பிய நெல்லை கணவர்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த நர்ஸ் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தான் ஏன் மனைவியைக் கொன்றேன் என்பதை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த நர்ஸ் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தான் ஏன் மனைவியைக் கொன்றேன் என்பதை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி அய்யம்மாள். இவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.

பாலசுப்ரமணியனுக்கும் அவரது மனைவி அய்யம்மாளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை வந்துகொண்டே இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாத அய்யம்மாள் கணவரைப் பிரிந்து பாளையங்கோட்டைக்கு வந்துவிட்டார். அங்கு வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

மருத்துவனையில் வேலை முடிந்து இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அய்யம்மாளை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பாலசுப்பிரமணியன். ஆரம்பத்தில் சாதாரணமாக பேச்சு தொடங்கி பின் விவாதமாக மாற மீண்டும் சண்டை போட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் அய்யமாளைத் தாக்கியுள்ளார். அதனைத் தடுக்கும்பொருட்டு அய்யம்மாள் தற்காப்பில் ஈடுபட்டதும் பாலசுப்பிரமணியனுக்கு கோபம் அதிகரித்துள்ளது.

இரவு நேரத்தில் ஆளில்லா இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி, பாட்டிலில் வைத்துள்ள பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார் அய்யம்மாள்.

அங்கிருந்து தப்பிச் சென்ற பாலசுப்ரமணியன் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பின்னர் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணையைத் தொடங்கி நடத்தி வந்தது காவல்துறை.

அப்போது பாலசுப்பிரமணியன் காவலர்களிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் சைத்தான் தான் எனது மனைவியைக் கொல்ல சொன்னது அதனால்தான் அவளை நான் கொன்றேன் என்று கூறியுள்ளார். 19 இடங்களில் அய்யம்மாளின் உடலில் சரமாரியாக குத்தப்பட்டிருப்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story