தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்கள் : தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்கள் :  தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

பணியிடங்கள் 6 மாதங்களுக்கு மட்டும் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு தற்காலிகமாக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவிட்-19 பேரிடர் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்களின் எண்ணிக்கை, தொகுப்பூதியம் மற்றும் கல்வித்தகுதி வருமாறு: Radiographer - 8,12,000/- P.M, Passed in DRA/DRDT/DRTT course, Dialysis Technicians Grade II - 8, 12,000/- P.M, Passed in Dialysis Technician course, ECG Technician - 25, 12,000/- P.M, Passed in ECG Technician course, CT Scan Technician - 10, 12,000/- P.M, Passed in CT Technician course, Anaesthesia Technician - 25, 12,000/- P.M, Passed in Anesthesia Technician course, Pharmacist - 6, 12,000/- P.M, Passed in D.Pharm, Staff Nurse - 150, 14,000/- P.M, B.Sc Nursing (or) DGNM course completed with valid council registration certificate, Lab Technician - 10, 15,000/- P.M, DMLT course certificate, Multipurpose Health Worker- 117, 12,000/- P.M, 8th Passed.

மேற்கண்ட பணியிடங்கள் 6 மாதங்களுக்கு மட்டும் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மேலும் இப்பணியிடங்கள் எக்காரணம் கொண்டும் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய கல்வி தகுதி தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி.

விண்ண ப்பிக்க கடைசி நாள்: 23.08.2021.

நிர்ணயிக்கப்பட்ட 23.08.2021 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Tags

Read MoreRead Less
Next Story