பலத்த மழை எதிரொலி: கொடைக்கானல் செல்வதில் சிக்கல்
தேனி மாவட்டத்தில் இருந்து கொடைக்கானல் செல்பவர்கள், வத்தலக்குண்டு அருகே உள்ள கொடைக்கானல் விலக்கிற்கு வந்து அங்கிருந்து மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் பயணித்தால் மட்டுமே கொடைக்கானல் செல்ல முடியும்.
இந்நிலையில் பெரியகுளம் கும்பக்கரை அருவி, அடுக்கம் வழியாக பெருமாள்மலையுடன் இணையும் வகையில் சாலை அமைக்கப்பட்டது. இந்த முழு பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆனாலும் பேருந்து தவிர இதர வாகனங்கள் சென்று வந்து கொண்டிருந்தன. இந்த பாதையை பயன்படுத்தும் போது 43 கி.மீ., பயணத்தொலைவு குறைந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் பெய்த பலத்த மழையில் இந்த ரோடு இரண்டு கி.மீ., துாரம் பிளவுபட்டது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல வனத்துறை தடை விதித்தது. இந்த சாலையை சீரமைக்கும் பணி முழுமையாக முடியவில்லை.
ஆனாலும் வாகனங்கள் சென்று வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தேனி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது. இதனால் இப்போதைய சூழலில் இந்த சாலையைப் பயன்படுத்த வேண்டாம். தேனி மாவட்டத்தில் இருந்து கொடைக்கானல் செல்பவர்கள் சுற்றிச் செல்ல வேண்டும். பழைய பாதையில் சுற்றிச் செல்வதை தவிர வேறு வழியில்லை என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu