தென்காசியில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

தென்காசியில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

தென்காசியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட சுரேஷ் @ மான் சுரேஷ்.

தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபரை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்.

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாக செல்லும் நபர்களை ஆயுதத்தைக் காட்டி மிரட்டியும், தாக்கியும் செல்போன் மற்றும் பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அதனை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் அறிவுறுத்தலின் பேரில், தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், சார்பு ஆய்வாளர் மாரிமுத்து, தலைமைக் காவலர்கள் கோபி, சீவலமுத்து, அருள்,காவலர்கள் முத்துக்குமார், சதாம்உசேன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படையினர் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தாெடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட வல்லம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் சுரேஷ் @ மான் சுரேஷ் என்ற நபரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story