தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் உண்டியல் காணிக்கை

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் உண்டியல் காணிக்கை

தென்காசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் உண்டியலில் பக்தர்கள் வழங்கப்பட்ட காணிக்கை தொகை பதினோரு லட்சம்.

தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயத்தில் ஒன்றாக தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் 13 நிரந்தர உண்டியல்கள் கிடைக்க பெறும் காணிக்கைகள் ஆண்டு தோறும் எண்ணப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில் நேற்று காணிக்கை எண்ணப்பட்டது. இதில் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

காலை முதல் மாலை வரை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 11 இலட்சத்து 75 ஆயிரத்து 437 ரூபாய் கிடைக்க பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story