தென்காசி - திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முக கவசம் வழங்கல்.

தென்காசி - திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முக கவசம் வழங்கல்.

தென்காசி நகர திமுக சார்பில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

தென்காசியில் நகர திமுக சார்பில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

தென்காசியில் நகர திமுக சார்பில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் திமுகவினர் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் முகக் கவசங்கள் சனிடைசர் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்

அதன் தொடர்ச்சியாக தென்காசி நகர திமுக சார்பில் நகராட்சிக்குட்பட்ட கொடிமரம் ,வாய்க்கால் பாலம் ,புதுமனை தெரு ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர செயலாளர் சாதிர் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகர பொருளாளர் ஷேக் பரீத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், வார்டு செயலாளர் சாரதி முருகன், நகர நிர்வாகிகள் முருகன், பால்ராஜ், முகமது அலி, செய்யது ஆபில் , இசக்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Read MoreRead Less
Next Story