/* */

8 நாட்களுக்குப் பின் குற்றால அருவியில் குளிக்க அனுமதி: மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

குற்றால அருவியில் எட்டு நாட்களுக்குப் பின்பு குளிக்க அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.

HIGHLIGHTS

8 நாட்களுக்குப் பின் குற்றால அருவியில் குளிக்க அனுமதி: மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
X

குற்றாலம் பிரதான அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

எட்டு நாட்களுக்குப் பின்பு குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலம் தென்காசி மாவட்டத்தில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும். இந்த கால சூழ்நிலையில் குற்றாலம் பிரதான அருவி,ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளிக்க அனுமதி இல்லாத தேன் அருவி மற்றும் செண்பகாதேவி அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டும்

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பொழிவு ஏற்பட்டதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் நெல்லை மாவட்ட சிறுவன் ஒருவன் சிக்கி உயிரிழந்தான். அதனைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கடந்த எட்டு நாட்களுக்கு பின்பு இன்று அனைத்து அருவிகளிலும குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர். மெல்லிய சாரலுடன் கூடிய காற்று வீசி வருகிறது. இதமான கால நிலை நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணி கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Updated On: 26 May 2024 7:25 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் மரக்கன்றுகள் நடும்
  2. கோவை மாநகர்
    வானதி சீனிவாசனை இழிவாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக புகார்...
  3. பொன்னேரி
    பெயிண்ட் மூலப்பொருள் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து..!
  4. காஞ்சிபுரம்
    நூறாண்டுகள் பழமை வாய்ந்த மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில்..!
  5. நாமக்கல்
    சேந்தமங்கலத்தில் பெண் போலீஸ் எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்தவர் கைது..!
  6. காஞ்சிபுரம்
    'நானும் ஓட்டு போடுகிறேன்' நான் ஏன் அரசியல் பேசக்கூடாது? மதுரை...
  7. காஞ்சிபுரம்
    மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - மதுரை ஆதீனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    ரிலாக்ஸ் பாஸ்! அதிக அளவு மன அழுத்தம் தொப்பையை உண்டாக்குமாம்!
  9. உலகம்
    உலகில் கடல் மட்டம் உயர்வதை காட்டும் நாசா கிராஃபிக்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்