ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின் உரிமைகளை மீட்கும்

ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற  உத்தரவு: மாநில அரசுகளின் உரிமைகளை மீட்கும்
X

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை அரசுகள் ஏற்க வேண்டும் என கட்டாயமில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் சம உரிமை உள்ளது. அப்படி செய்தால் அது கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது. பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜி.எஸ்.டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பல ஆண்டுகளாக மாநில உரிமைகளை குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு, குடியரசு தலைவர், ஆளுநர் ஆகியோரின் செயல்கள் இருந்தன. ஜி.எஸ்.டி கவுன்சில் மாநில, மத்திய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது.


கவுன்சில் அதன் பரிந்துரைகளை பின்பற்றுமாறு அரசாங்கங்களை கட்டாயப்படுத்த முடியாது, என்றார். ஆளுநரின் சம்பிரதாய ஒப்புதலுக்காக மாநில அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இன்னும் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. அவர்கள் முடிவு செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பிறகு என்ன தேவை உள்ளது

அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை உணர்த்தி இருப்பது கவனிக்கத்தக்கவை. ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்பான தீர்ப்பு சட்டமைப்பில் உள்ளவற்றையே சுட்டிக் காட்டி உள்ளது. . மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக் காட்டுவது தான் கவனிக்க வேண்டியது.

வரலாற்றில் இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்து கொண்டிருப்பதாக கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன்வைத்து உள்ளோம். மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளை கொண்டாடும் வகையிலான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலேயே தீர்ப்புகள் வெளியாகி உள்ளன. ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. மாநில சட்டமன்ற உரிமைகளை உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வழியாக மீண்டும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!