பெரம்பலூர் அருகே மாமனாரை அடித்து கொலை செய்த மருமகன்

பெரம்பலூர் அருகே மாமனாரை அடித்து கொலை செய்த மருமகன்
பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மாமனாரை அடித்து கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் அரியலூரில் உள்ள தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளதாக தகவல்.

ரஞ்சிதா செல்வத்திற்கும் இடையே அடிக்கடி ஏற்படும் சண்டை காரணமாக தாய் வீட்டுக்கு செல்வது வழக்கமாக நடந்து வந்துள்ளது.வழக்கம் போல நடைபெற்ற இந்த சண்டையை சமாதானம் செய்து மருமகனுடன் மகளை சேர்த்து வைக்க வேண்டி மகள் ரஞ்சிதாவை அழைத்துக் கொண்டு தந்தை செல்லமுத்து இன்று கூடலூரில் உள்ள மருமகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மருமகனை சமாதானம் செய்ய நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் வார்த்தை முற்றியதால். கைகலப்பு ஏற்பட்டு செல்லமுத்துவின் மருமகன் செல்வம் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து மாமனாரை கம்பால் அடித்ததில் மயங்கி விழுந்த செல்லமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருவத்தூர் போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய செல்வம் மற்றும் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பின்னர் சம்பவத்தில் உயிரிழந்த செல்லமுத்துவின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மகள் மருமகனிடையே ஏற்பட்ட சண்டையை சமாதானம் செய்து வைக்க வந்த மாமனாரை மருமகன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags

Read MoreRead Less
Next Story