குன்னம் அருகே ஓராண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பெயரளவுக்கு பணிகளை தொடங்கி, ஓராண்டாக எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையே உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தில், ஓராண்டுக்கு முன்பு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 3 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான அத்திவாரம் மட்டுமே போடப்பட்டது. அதன்பிறகு, இன்று வரை எவ்விதமான கட்டுமானமோ, தண்ணீர் தொட்டியோ கட்டப்படவில்லை.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் தொட்டி பணி என்ன ஆயிற்று? அதற்கென்றே ஒதுக்கப்பட்ட தொகை எங்கே போனது? பணி ஏன் முடங்கி உள்ளது என்று தெரியவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், எங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது என்றனர்.
கட்டுமானப்பணி இடத்தை, அரசு அதிகாரிகள் பார்வையிட வில்லை. இனியேனும் இப்பகுதியை ஆய்வு செய்து, முடங்கியுள்ள தண்ணீர் தொட்டி பணிகளை தொடங்க வேண்டும்; அதன் மூலம் தங்களது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu