/* */

குளித்தலை பகுதியில் மகனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என். நேரு பிரச்சாரம்

குளித்தலை பகுதியில் மகனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என். நேரு பிரச்சாரம் செய்தார்.

HIGHLIGHTS

குளித்தலை பகுதியில் மகனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என். நேரு பிரச்சாரம்
X

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரம் செய்தார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக திமுக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கேஎன் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்திரமோகனும், பாரதீய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும், நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழியும் போட்டியிடுகிறார்கள். இது தவிர சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில் இன்று திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேருவிற்காக குளித்தலை ஒன்றியத்தில் உள்ள கோட்டைமேடு குட்டப்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.அப்போது வேட்பாளருடன் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், தொகுதி பொறுப்பாளர்கள் எம்பி அப்துல்லா பரணிதரன், நன்னியூர் ராஜேந்திரன் , திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி , திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் துரைராஜ் உட்பட பலர் சென்று இருந்தனர்.

சென்ற இடங்களில் எல்லாம் வாக்காளர்கள் அருண் நேருவிற்கு சிறப்பாக வரவேற்பு அளித்தனர். உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களிக்கிறோம் என உறுதி அளித்தனர்.

Updated On: 8 April 2024 4:06 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  7. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  9. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?