தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஜூலை 27ம் தேதி கள்ளக்குறிச்சி வருகை

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஜூலை 27ம் தேதி கள்ளக்குறிச்சி வருகை
X

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கனூங்கோ 

சின்ன சேலத்தில் மாணவியின் மரணம் தொடர்பாக ஜூலை 17 அன்று வெடித்த பெரும் வன்முறையைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலையீடு.

சின்ன சேலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கனூங்கோ ஜூலை 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி வருகிறார்.

புதன்கிழமையன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரு. கனூங்கோ, உறைவிட பள்ளியில் பெண் குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு வருவேன் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை, பள்ளி வளாகத்தில் 17 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக சிபி-சிஐடி விசாரணையைத் தொடங்கியது. பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி , சிறுமியின் மரணத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது ஜூலை 17-ம் தேதி நடந்த கலவரம் குறித்து விசாரிக்க சேலம் ரேஞ்ச் துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் அபினாபு தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை தமிழக காவல்துறை அமைத்துள்ளது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்