/* */

பயிர் பாதிப்பு பகுதிகளை நாகை எம்எல்ஏ பார்வையிட்டார்

டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பை அறிந்த பின்னரும், தமிழக அரசு மௌனம் காப்பதில் நியாம் இல்லை. மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சனம்.

HIGHLIGHTS

பயிர் பாதிப்பு  பகுதிகளை  நாகை எம்எல்ஏ பார்வையிட்டார்
X

நாகை மாவட்டம் பாலையூர், பெருங்கடம்பனூர், சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்தனர் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து உள்ளன. பயிர் பாதிப்புக்கு உள்ளான பாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி பார்வையிட்டார். அப்போது மழையால் சாய்ந்து மீண்டும் முளைத்த நெற்பயிர்களை எடுத்து எம்எல்ஏ விடம் காண்பித்து விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கூறிய தமிமுன் அன்சாரி, டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பயிர் பாதிப்பினால் விவசாயிகள் இன்றைய சூழலில் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளதாக கூறிய அவர், டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பை அறிந்த பின்னரும், தமிழக அரசு மௌனம் காப்பதில் நியாம் இல்லை என்று விமர்சனம் செய்தார். மேலும் பயிர் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு முதற்கட்ட நிவாரண தொகையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொண்ட தமிமுன் அன்சாரி வரும் 20ஆம் தேதி விவசாயிகளுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் மஜக பங்கேற்கும் என்றும் அவர் கூறினார்.

Updated On: 18 Jan 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரிலாக்ஸ் பாஸ்! அதிக அளவு மன அழுத்தம் தொப்பையை உண்டாக்குமாம்!
  2. உலகம்
    உலகில் கடல் மட்டம் உயர்வதை காட்டும் நாசா கிராஃபிக்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. இந்தியா
    பிரதமர்-போப் சந்திப்பை கேலி செய்யும் பதிவு: கிறிஸ்தவர்களிடம்...
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே வெறிநாய்த் தொல்லையால் ஆடுகள் இறப்பு
  7. JKKN
    AI இயக்கம் குறித்த ஆராய்ச்சி!
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
  9. திருவள்ளூர்
    ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா
  10. செங்கம்
    காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை வைத்து சரமாரியாக தாக்கிய...