அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
X

பைல் படம்.

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 01.12.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கீரனுர் (புதுக்கோட்டை) 6, வீரபாண்டி (தேனீ) 4, பவானிசாகர் (ஈரோடு), ஆண்டிபட்டி (தேனீ) தலா 3, அரண்மனைப்புதூர் (தேனீ), கள்ளக்குடி(திருச்சிராப்பள்ளி), சத்தியமங்கலம் (ஈரோடு), படலுர் (பெரம்பலூர்), அதிராம்பட்டிணம் (தஞ்சாவூர்), போடிநாய்க்கனுர் (தேனீ), இலுப்பூர் (புதுக்கோட்டை) தலா 2, செட்டிகுளம் (பெரம்பலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), கள்ளக்குறிச்சி, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), பர்லியார் (நீலகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ஓமலூர் (சேலம்), ஆலங்குடி (புதுக்கோட்டை), துறையூர் (திருச்சிராப்பள்ளி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மதுக்கூர் (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), அரிமலம் (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), உசிலம்பட்டி (மதுரை), சிதம்பரம் (கடலூர்), எரையூர் (பெரம்பலூர்) தலா 1.

வெப்பநிலை பற்றிய குறிப்பு:

குறைந்தபட்ச வெப்பநிலை : நாமக்கல்லில் 20.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூர், நீலகிரி மாவட்டங்களில் தஞ்சாவூர், சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தர்மபுரி, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி இயல்பை விட குறைவு.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது :    துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு
குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
ai in future agriculture