மேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாக சரிவு
X

மேட்டூர் அணையின் தோற்றம் (கோப்பு படம்).

குறுவை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 106 அடியாக சரிந்தது.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 3 ஆயிரத்து 500 கன அடியாக சரிந்தது. ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 369 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்தது. வினாடிக்கு 2 ஆயிரத்து 593 கன அடியாக குறைந்தது.

அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 106.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 106 அடியானது.

Tags

Next Story
photoshop ai tool