மதுரை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான  தங்க கட்டிகள் பறிமுதல்
X

பைல் படம்.

துபாயில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து ரூ. 2.44 கோடி மதிப்பிலான ஐந்து கிலோ தங்கத்தை சுங்க இலாகாவினர் கைப்பற்றினர்.

மதுரை விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பயணி ஒருவரின் சூட்கேஸ் கேட்பாராற்று இருந்ததை எடுத்த சோதனை செய்தனர். இதில், 1 கிலோ எடையுள்ள 5 தங்க கட்டிகள் இருந்தது.

இதன் மதிப்பு 2 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை கைப்பற்றி யாருடையது என்று விமானத்தில் வந்த பயணிகளிடம் விசாரணை செய்தபோது, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உள்பட இருவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் .

Tags

Next Story
ai in agriculture india