மதுரையில் இறைச்சிக் கடைக்காரர்களுக்கு அபராதம் : மாநகராட்சி ஆணையாளர்..!
மதுரை வைகை தென்கரை சாலியல் இறைச்சிக் கழிவுகளை கொட்டிய கடைக்காரர்களுக்கு அபராதம்
பொதுவெளியில்,இறைச்சிக் கழிவுகளை கொட்டிய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை:
மதுரை மாநகராட்சி வைகை தென்கரை சாலை பகுதியில், இறைச்சி கொட்டியதாக புகார் வந்ததன் அடிப்படையில், ஆணையாளர் ச.தினேஷ் குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி வைகை தென்கரை சாலை பகுதியில் வைகை ஆற்று கரைப்பகுதியில், இறைச்சி கழிவுகளை கொட்டியதாக புகார் வந்ததன் அடிப்படையில், ஆணையாளர் ,நேரில் ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு கழிவுகள் அகற்றப்பட்டு அப்பகுதியில் தூய்மைப்படுத்தப்பட்டது. பின்னர் பீளீச்சிங் பௌடர் தெளிக்கப்பட்டது.
மேலும்,பொதுவெளியில் இறைச்சிக்கழிவுகளை கொட்டிய 5 கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.50000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,இது போன்று சாலைகள், பொது இடங்கள், வைகை ஆறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டுவது கண்டறியப்பட்டால் மாநகராட்சியின் மூலம் அபராதம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் கூறினார்.
தொடர்ந்து,மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.16 பீ.பீ.குளம் நேரு தெருவில் சாலைகளில் தேங்கியிருந்த மழைநீரினை அகற்றும் பணிகள், பீ.பீ.குளம் வாய்க்கால் செல்லக்கூடிய பகுதிகளான நரிமேடு கேந்திரியா வித்யாலயா பள்ளி பின்புறம் சொக்கி குளம் அண்ணாநகர் பகுதி, டாக்டர் தங்கராஜ் சாலை உலக தமிழ்ச்சங்கம் அருகில், கே.கே.நகர் மெயின் ரோடு வக்பு வாரிய கல்லுரி வளாகம், ராமமூர்த்தி தெரு மற்றும் கோகலே ரோடு 1வது தெரு சந்திப்பு (விஷால் டி மகால் பின்புறம்) ஆகிய பகுதிகளில் ஆணையாளர் , நேரில் பார்வையிட்டு வாய்கால்களில் மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்,மேலமடை ஆவின் சந்திப்பு அருகில் செல்லும் மானகிரி வாய்க்காலில் மழைநீர் செல்வது குறித்தும், செல்லூர் கண்மாயில் நீர்வரத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக்,செயற் பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், காமராஜ்,உதவிப்பொறியாளர்கள் சோலைமலை, அமர்தீப், கருப்பையா,சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu