மதுரை செல்லூரில் வெள்ளம் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
மதுரையில் வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மதுரையில் வெள்ள பாதிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் உடனடியாக மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இன்று (30.10.2024) நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மதுரை வந்த முதலமைச்சர், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் வெள்ளபாதிப்பு நிலவரம் குறித்து, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, மதுரையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் அவ்வாறு நேராதிருக்க உடனடியாக மேற் கொள்ளவேண்டிய பணியாக 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், முதலமைச்சர் ஸ்டாலின் செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேறுவதற்கு சிமெண்ட் கால்வாய் 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உடனடியாக அமைத்திட உத்தரவிட்டார். இதன்மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu