மதுரை அருகே, பேருந்து நிறுத்த நிழற்குடையை சேதப்படுத்தும் குடிகாரர்கள்..!

மதுரை அருகே, பேருந்து நிறுத்த நிழற்குடையை சேதப்படுத்தும் குடிகாரர்கள்..!
X

குடி காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை.

மதுரை, தாராப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மது பிரியர்கள் செய்யும் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சி, தாராப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பெயரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எம் எல் ஏ தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தினசரி மாலை மற்றும் இரவு நேரங்களில் கொடிமங்கலம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்கிச் செல்லும் மது பிரியர்கள் தாராபட்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை உள்ளேயே அமர்ந்து மது அருந்துவதும் பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் பெண்கள் மற்றும் பயணிகளிடம் தகாத வார்த்தைகள் பேசுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதன் உச்சகட்டமாக சில தினங்களுக்கு முன்பு நிழல் குடையில் இருந்த இரும்பு கைப்பிடி கம்பியை உடைத்து அருகில் உள்ள கண்மாய்க்குள் வீசிச் சென்றுள்ளனர்.


இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் முக்கியமாக பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் மது பிரியர்களின் அட்டகாசத்தை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என தாராபட்டி பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

மதுவால் நாடு முழுவதும் பல சீரழிவுகள் நடபபதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இதுவும் ஒன்று என்று கடந்து சென்றுவிட முடியாது. நகரங்களில் இருந்து தூரமாக இருக்கும் கிராமங்களில் சில பண்பாடுகளை நாம் காணமுடியும். அங்குள்ளவர்கள் இதுபோன்று பேருந்து நிறுத்தங்களை சேதப்படுத்தும் காரியங்களை செய்ய மாட்டார்கள். அந்த அளவுக்கு பண்பாடு இருக்கும்.

உடைத்து வீசப்பட்டுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் கைப்பிடி

ஆனால் நகரங்களில் போதை தலைக்கேறிவிட்டால் உலகத்தில் தன்னைவிட ஒரு அதீத மனிதன் கிடையாது என்பதைப்போல நடந்துகொள்வார்கள். அதைபோன்றவர்களின் அநாகரிக செயல்கள்தான் பெண்களை கேலி செய்வது, அவ்வழியாக செல்வோரை சீண்டுவது, பேருந்து நிறுத்த நிழற்குடையை சேதப்படுத்துவது என தரமற்ற செயல்களை செய்வார்கள். அவர்களுக்கு ஒரே மறுத்து காவல்துறையினர் மட்டுமே.

அதனால், இதைப்போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, கழிவறைகளில் வழுக்கி விழச் செய்வது நல்ல பலன்தரும் சிகிச்சையாக அமையும் என்று இப்பகுதி மக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai based job portal