சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு

சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு
X

பறிமுதல் செய்யப்பட்ட சேவல்கள்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் முள்காட்டுப்பகுதியில், செக்கானூரணி, கொடிமங்கலம், கண்ணனூர் உள்பட இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். சேவல் சண்டை போட்டி நடத்திக் கொண்டிருப்பதாக காடுபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு சேவல் சண்டை போட்டி கலந்து கொள்ள இருந்த 4 சேவல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதி சேவலுடன் வந்திருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சேவல் சண்டை போட்டி ஏற்பாடு செய்த மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் காசிலிங்கம் உட்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நீதிமன்ற தடை உள்ள சேவல் சண்டையை நடத்தியது அதிர்ச்சியை உண்டாக்கியது. மேலும், அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகளை கட்டி சேவல் சண்டை நடத்தினர் என்றும், சேவல்சண்டை பார்த்தவர்கள் ஒரு வித பீதியுடன் இருந்ததாகவும் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!