அலங்காநல்லூர் அருகே பள்ளியில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு..!

அலங்காநல்லூர் அருகே பள்ளியில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி  சந்திப்பு..!
X

முன்னாள் மாணவர்கள் 

21 ஆண்டுகளுக்கு பின்பு அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

21 ஆண்டுகளுக்கு பின்பு அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

அலங்காநல்லூர:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15 பி மேட்டுப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல் நிலைப்பள்ளி உள்ளது .இங்கு படித்த மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை உள்ளிட்ட அரசியல் ஆகிய பொதுத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர் .

இந்த நிலையில், கடந்த 2002 -2003 ஆம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பின்பு நடந்த இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இந்த பள்ளியில் பயின்ற போது நடந்த நிகழ்வுகள் உள்ளிட்ட சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.


மேலும், அரசியல், காவல்துறை, பொறியியல், ஆசிரியர், தொழில் என பல்வேறு துறைகளில் பணிபுரியக்கூடிய நிலையில் இந்த முன்னாள் மாணவர்கள் தங்களது கல்வி, வாழ்க்கை,தங்களது குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவற்றை மனம் விட்டு பேசி மகிழ்ந்து உணவருந்தி பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!