சோழவந்தானில் திமுக, அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை...!

சோழவந்தானில் திமுக, அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை...!
X

சோழவந்தானில் திமுகவினர் தேவர் சிலைக்கு மாலை மரியாதை செய்தனர்.


சோழவந்தானில் திமுக, அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

சோழவந்தானில் திமுக, அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

சோழவந்தான்.

மதுரை,சோழவந்தானில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி. விழா ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் அதிமுகவினர் மரியாதை செய்தனர் .

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை புறநகர், மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மற்றும் சோழவந்தான் பேரூர் சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கி பசும்பொன் தேவர் திருவுருவசிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் , சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் , நிர்வாகிகள் மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், டீக்கடை கணேசன் , ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா , வனிதா, முன்னாள் சேர்மன் முருகேசன், பேரூர் துணைச் செயலாளர் தியாகு, இளைஞர் அணி தண்டபாணி, அவைத் தலைவர் முனியாண்டி, மருது சேது, ஜெயபிரகாஷ், துரைக் கண்ணன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்படபலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

திமுக சார்பில் மரியாதை

சோழவந்தானில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவசிலைக்கு பேரூர் திமுக துணை செயலாளர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை செய்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவசிலைக்கு,பேரூர் திமுக துணைச் செயலாளர் 1வது வார்டு ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்துச்செல்வி சதீஷ், ஈஸ்வரி ஸ்டாலின் கௌதம ராஜா, சிவா மாவட்ட பிரதிநிதி சுரேஷ், இளைஞரணி முட்டை கடை காளி, வார்டு செயலாளர்கள் 11 வது வார்டு முத்துச்செல்வன், ஏழாவது வார்டு துணைச் செயலாளர் முருகன், மணிகண்டன், ஒன்றிய பிரதிநிதிகள் கண்ணன், கௌதம ராஜாநாகேந்திரன் ,பிரதிநிதி இராமநாதன், ஏழாவது வார்டு பிரதிநிதி முத்து விஜயன், கிருஷ்ணன் மற்றும் மகளிர் அணியினர் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!