சோழவந்தானில் பாஜக செயற் குழுக் கூட்டம்:

மத்திய இணையமைச்சராக பதவி ஏற்றுள்ள பாஜக முன்னாள் தலைவர் முருகனுக்கு வாழ்த்து

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பாஜக மாவட்ட செயற் குழுக் கூட்டம் நடைபெற்றது.

பாரதியஜனதாகட்சி மதுரைபுறநகர்மாவட்ட செயற்குழுக் கூட்டம் சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் மகாசுசீந்திரன் தலைமை வகித்தார்

விவசாய அணி மாநிலச் செயலாளர் மணி முத்தையா முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தன்மூர்த்தி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கண்ணன் தொகுத்து வழங்கினார்.

ட்டியலின மாநிலத் தலைவர் பொன் கணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்சி செயல்பாடு மற்றும், வளர்ச்சி குறித்து பேசினார்.

கூட்டத்தில், தமிழக நிதி அமைச்சர் அமைச்சர் தியாகராஜனையும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதையும் கண்டிப்பது. ஜெய்ஹிந்த் வார்த்தையை கொச்சைப்படுத்தியதையும், பொய் வழக்குப் போடுவதை கண்டித்தும், புறநகர் மாவட்டத்தில் நடத்தக் கூடிய அனைத்து நிகழ்ச்சிகளையும் நிர்வாகிகள் திறம்பட செய்துவருவதற்கு பாராட்டு தெரிவித்தும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் வழங்கியதற்கும், கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முழுநேர பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

ஊடக மாவட்டத் தலைவர் தங்கவேல்சாமி, மாவட்ட நிர்வாகிகள் சீத்தாராமன்,முத்துராமன்,ராஜா,ஆதிசங்கர்,மாவட்டப் பொருளாளர் சந்திரபோஸ் ஆகியோர் கண்டன தீர்மானம்,பாராட்டுத் தீர்மானம் மற்றும் செயற்குழு தீர்மானங்கள்ஆகியவற்றை வலியுறுத்திப் பேசினார்கள்.இதில், 28 மண்டல அனைத்து பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஒன்றியத் தலைவர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!