குமரியில் இன்று ஒரே நாளில் 13, 210 நபர்களுக்கு தடுப்பூசி

குமரியில் இன்று ஒரே நாளில் 13, 210 நபர்களுக்கு தடுப்பூசி
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 45 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 13210 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்த நிலையில் தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் மாவட்டத்தில் இன்று 45 இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன.

இதனிடையே தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆன் லைன் டோக்கன் முறை மற்றும் நேரடி டோக்கன் முறை என இரு முறைகளை அமல்படுத்திய மாவட்ட நிர்வாகத்தின் செயலால் பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இன்று 13210 டோஸ் தடுப்பூசிகள் 45 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் 24 மையங்களில் ஆன் லைன் முறையிலும் 21 மையங்களில் நேரடி முறையிலும் டோக்கன் பெற்று டோக்கன் பெற்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story