/* */

சர்வதேச விமான முனையத்தில் பட்டு சேலையில் பாரம்பரிய கலை ஓவியங்கள்

காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டு சேலை வடிவமைப்பாளர் குமரவேல் தம்பதியினர் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட ஒன்பது பாரம்பரிய கலைகளை பட்டு சேலையில் வடிவமைத்து நெய்துள்ளனர்.

HIGHLIGHTS

சர்வதேச விமான முனையத்தில் பட்டு சேலையில் பாரம்பரிய கலை ஓவியங்கள்
X

காஞ்சிபுரத்தை சேர்ந்த குமரவேல் என்ற பட்டு சேலை வடிவமைப்பாளர் உருவாக்கிய தமிழக பாரம்பரிய கலைகள்.

பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் விளக்கடி கோயில் தெரு பகுதியில் வசித்து வருபவர் குமரவேல் கலையரசி தம்பதியினர். இவர் பட்டு சேலைகளில் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப உருவம் பதித்த சேலைகளை உருவாக்குபவர்.


இவர் ஏற்கனவே திருப்பதி பெருமாள் உருவம், ஆண்டாள் திருப்பாவை, லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்டவைகளை பட்டு சேலையில் வடிவமைத்து பெயர் பெற்று வருகிறார்.

இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 1200 கோடி செலவில் தற்போது புனரமைக்கப்பட்டு புதிய முனையத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் சுற்றுலாவினை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் தமிழக பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், பரதநாட்டியம், தெருக்கூத்து, காவடி ஆட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் ஆகிய 9 கலைகளை அறியும் வண்ணம் அங்கு பார்வைக்கு வைக்க திட்டமிடபட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பட்டுக்கு பெயர் போனதால் இந்த பாரம்பரிய கலை உருவங்களை பட்டு மூலம் நெசவு செய்ய குமரவேல் கலையரசி தம்பதியினரை நாடி உள்ளனர்.

அதன் அடிப்படையில் கடந்த இரண்டு மாத காலமாக 9 பாரம்பரிய கலைகளின் உருவங்களை வடிவமைக்கும் பணிகளில் இருவரும் ஈடுபட்டு இறுதியாக அதனை உறுதி செய்து உள்ளனர்.

ஒவ்வொரு பாரம்பரிய கலை உருவங்களும் 49 இன்ச் அகலமும், 85 இன்ச் உயரமும் கொண்டதாகும்.

ஒவ்வொரு பாரம்பரிய கலை உருவங்களிலும் வெள்ளை, மஞ்சள், சிவப்பு , எம்ஆனந்தாா , புவனா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட வண்ணங்களில் இந்த உருவங்கள் உருவாகியுள்ளது.

இதுகுறித்து வடிவமைப்பாளர் குமராவேல் கூறுகையில், தனது நண்பர் மூலம் இதனை வடிவமைத்து நெய்ய வாய்ப்பு கிடைத்ததாகும், ஒவ்வொரு பாரம்பரிய கலை உருவங்களில் உள்ள வண்ணங்களை நேர்த்தியாக உருவாக்க அவர்கள் ஆலோசனை அளித்ததின் பேரில் கடும் உழைப்பில் 9 உருவங்கள் வடிவமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் , லவகுமார் , வெங்கட், லோகேஷ் உள்ளிட்ட 11 பேர் கொண்ட நெசவாளர்கள் தொடர்ந்து கடந்த 30 நாட்களாக 24 மணி நேரமும் சுயேட்சி முறையில் இதனை நெய்தபின் அதை கண்டதில் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.


இறுதியாக தான் இந்த பட்டு சேலை ஓவியங்கள் மீனம்பாக்கம் புதிய சர்வதேச விமான முனைய நிலையத்தில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது என்பதும் , அதனை பாரதப் பிரதமர் தமிழக முதல்வர் உள்ளிட்டோர் பார்வையிடுவது தங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி அளித்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் காஞ்சிபுரத்தில் பட்டுத்தொழில் நலிவடைந்ததாக கூறும் நிலையில், விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை தயார் படுத்திக் கொண்டு இது போன்ற பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு காஞ்சி பட்டு என்றுமே உலகப் புகழ் பெற்றது என்பதை நிரூபிப்போம் எனவும் தெரிவித்தார்.

மேலும் பாரம்பரிய கலைகளில் தெருக்கூத்து, காவடி மயிலாட்டம் கரகாட்டம் உள்ளிட்டவைகளை உருவாக்க அதிக சிரமம் மேற்கொண்டதாகவும் இக்கலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் வண்ணங்கள் அவர்களின் உடை உள்ளிட்டவைகளை நன்கு ஆராய்ந்த பின்னி இவை உருவாக்கப்பட்டது என்பதும் தங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

Updated On: 8 April 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் இரவில் வெற்றிலையை மென்று சாப்பிடுங்க... இதுல ஏகப்பட்ட விஷயம்...
  2. லைஃப்ஸ்டைல்
    பாகற்காய் கசப்புதான்; அதுதரும் பலன்களோ பலமடங்கு இனிப்பானது - அந்த...
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தை வளர்ச்சிக்கு உதவும் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?
  4. குமாரபாளையம்
    தளபதி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
  5. சிங்காநல்லூர்
    சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவில்தான் மோடி பிரதமராக இருக்கிறார்...
  6. குமாரபாளையம்
    உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதி மொழி
  7. போளூர்
    போளூர் அருகே நடந்த கார் விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழப்பு
  8. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி: ஜூன்.25ல் துவக்கம்
  9. ஆரணி
    ஆரணி அருகே மூன்று நாட்களாக மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு
  10. ஈரோடு
    கொடுமுடியில் 19ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்