காஞ்சிபுரம் விவசாயிக்கு டிராக்டர் : நடிகர்கள் லாரன்ஸ் , எஸ் ஜே சூர்யா வழங்கினர்..!

காஞ்சிபுரம் விவசாயிக்கு டிராக்டர் : நடிகர்கள் லாரன்ஸ் , எஸ் ஜே சூர்யா  வழங்கினர்..!

மாற்றம் அமைப்பின் சார்பில் எஸ் ஜே சூர்யா காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வரும் தம்பதிக்கு டிராக்டர் வழங்கி விழாவில் பேருரை ஆற்றிய போது. உடன் மாற்றம் அமைப்பின் நிறுவனர் ராகவா லாரன்ஸ்

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கத்தில் வசித்து வரும் விவசாயி முனுசாமி தெய்வயானை குடும்பத்திற்கு எஸ்.ஜே.சூர்யா சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பெண் விவசாயிக்கு மாற்றம் அறக்கட்டளை சார்பில் விவசாய டிராக்டர் சாவியினை திரைப்பட நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.அனைவரும் தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்து அதை மாற்றத்தை நோக்கி என எக்ஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.

மாற்றம் என்ற சமூக அமைப்பினை உருவாக்கி கடந்த சில மாதங்களாக பத்துக்கும் மேற்பட்ட விவசாய டிராக்டர்களை திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வழங்கி வருகிறார். அவருடன் தற்போது திரைப்பட பிரபலங்களான எஸ் ஜே சூர்யா , கே பி ஒய் பாலா , அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோரும் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அவ்வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் எஸ் ஜே சூர்யா காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் மூத்த விவசாயி முனுசாமி - தெய்வயானை குடும்பத்திற்கு டிராக்டர் ஒன்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிராமத்திற்கு வருகை புரிந்த திரைப்பட பிரபலங்களை கிராம மக்கள் சிலம்பம் மான் கொம்பு ஆட்டமுடன் , மேளதாளம் முழங்க பூ தூவி வரவேற்றனர். இதன்பின் மூத்த விவசாயிக்கு சாவியை அளித்து பத்து நாட்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டு விட்டு மீதமுள்ள 20 நாட்களில் ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவி புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் மாற்றத்தை நோக்கி செயல்பட்டு வரும் நமது குழுவினருக்கு நன்றியை தெரிவித்ததாகவும், தன்னால் இயன்ற உதவிகளை நேரடியாக அவர்களுக்கு செய்து விட்டு மாற்றம் அமைப்பின் எக்ஸ் இணையதளத்தில் பதிவிட்டு ஆதரவு தர வேண்டும் எனவும், எந்த ஒரு வங்கி கணக்கும் இந்த அமைப்பிற்கு இல்லை என்பதை தெரிவித்தார்.

இந்த கிராமத்திற்கு வருகை புரிந்த தங்களை வரவேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அனைவரும் அனைவரையும் நேசியுங்கள் என தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story