காஞ்சிபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

காஞ்சிபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

பெண் காவலர் டில்லி ராணி.

காஞ்சிபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் குடும்பத் தகராறில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்துபவர் டில்லி ராணி. இவர் தனது கணவர் மேகநாதன் மற்றும் இரு குழந்தைகளுடன் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களாக கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக இருந்த நிலையில் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு அளித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக விடுமுறை எடுத்திருந்த நிலையில், இன்று மீண்டும் பணிக்கு வந்து மதிய உணவிற்காக சங்கரமடம் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றபோது அங்கு மேகநாதன் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேகநாதன்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் மேகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டில்லி ராணியை கைகளில் சரமாரியாக வெட்டிய நிலையில் மயங்கி விழுந்துள்ள டில்லி ராணியை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் எஸ் பி சண்முகம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் இதுகுறித்து அவரிடம் விசாரித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் அவருக்கு தேவையான முதல் உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சீருடையில் இருந்த பெண் காவலரை கணவரே கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story