திருப்பூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

திருப்பூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
X

திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Heavy Rain Alert- திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Heavy Rain Alert- தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் அதிக கனமழையும்; நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும்.

துாத்துக்குடி, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் வேலுார் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; ஈரோடு, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மிக கனமழையும் பெய்யும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!