திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல்: சீனிவாசன் தலைமையில் நடந்தது

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல்:  சீனிவாசன் தலைமையில் நடந்தது

திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கழக அமைப்பு தேர்தலைமுன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை வழங்கி துவங்கி வைத்தார்.

ஜனநாயக முறைப்படி 234 தொகுதிகளிலும் கட்சியின் உட்கட்டமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது என்றார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கழக அமைப்பு தேர்தல் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை வழங்கி துவங்கி வைத்தார்.கழக ஒருங்கிணைப் பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக அமைப்புத் தேர்தல் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் ,கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் இரா.கோபாலகிருஷ்ணன் ,அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம் எஸ் பாண்டியன் ஆகியோர் இணைந்து விண்ணப்ப படிவங்களை கழக நிர்வாகிகளுக்கு கொடுத்து துவக்கி வைத்தனர்.

இதில் அமைப்புச் செயலாளர் வி .மருதராஜ் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி பி பி பரமசிவம், மத்திய கூட்டுறவு வங்கி ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, சரவணன் மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஒன்றிய, நகர ,பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது: ஜனநாயக முறைப்படி 234 தொகுதிகளிலும் கழக உட்கட்டமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story