பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்
X

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இன்று நடைபெற்ற கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள மெணசி, அ.பள்ளிப்பட்டி, மோளையானூர், பையர்நத்தம், பொ.மல்லாபுரம், ஆலாபுரம், கடத்தூர், புட்டிரெட்டிப்பட்டி, ஒடசல்பட்டி, சந்தப்பட்டி, இராமியம்பட்டி, ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி 2-ம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார கால்நடை துறை டாக்டர் ராமகிருஷ்ணன் முகாமினை தொடங்கி வைத்தார். இதில் அந்தந்த கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மொரப்பூர் கால்நடை மருத்துவமனை எல்லைக்குட்பட்ட மோளையானூர், பாப்பிரெட்டிப்பட்டி கிராமங்களிலுள்ள 1140 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கால்நடை மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!