பாப்பிரெட்டிப்பட்டி மாணவியர் விடுதியில் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையர் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி மாணவியர் விடுதியில் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையர் ஆய்வு
X
இரு தினங்களுக்கு முன்பு விடுதியில் கழிப்பறை, போதிய தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச், புதுப்பட்டி மாணவிகள் தங்கும் விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 56 பேர் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு விடுதியில் கழிப்பறை, போதிய தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பள்ளி மாணவிகள் திடீரென விடுதி முன்புள்ள நுழைவாயில் பகுதி சாலையில் தரையில் காலி பக்கெட்டுடன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் வயல்வெளி பகுதி முட்புதர் பகுதிக்கும் செல்வதாகவும், குடிநீர் வசதி, தண்ணீர் வசதி இல்லாததால் வயல்வெளிக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து குளிப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

இந்நிலையில் இச்ச ம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொ ள்வதற்கு தேசிய தாழ்த்தப்பட்ட ஆணை யத்தின் எஸ்.சி. எஸ். டி. தமிழ்நாடு ஆணைய இயக்குனர் ரவிவர்மன் பள்ளி மாணவி யரின் தங்கும் விடுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டார். மேலும் விடுதியில் தண்ணீர் வசதி செய்யப்ப ட்டுள்ளதா? கழிப்பிடங்கள் சுத்த மாக பராமரிக்க ப்படுகிறதா? தரமான உணவுகள் வழங்க ப்படுகின்றதா? என்பது குறித்து மாணவிகளிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையின் போது அரூர் ஆர்.டிஓ., வில்சன், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, துணை துணை வட்டாட்சியர் மில்லர், காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself