தர்மபுரி மாவட்ட ஸ்வீட் கடைகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
X
இனிப்புகள் - காட்சி படம்
By - C.Vaidyanathan, Sub Editor |29 Oct 2023 9:49 AM IST
தீபாவளிக்கு இனிப்பு, காரங்களை தயாரித்து விற்கும் கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்கும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
- இனிப்பு, காரவகைகள் தயாரிக்க, தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்படபொருட்கள் பயன்படுத்தக்கூடாது.
- இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நிறமி சேர்க்கக் கூடாது.
- ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி, உணவு தயாரிக்க பயன்படுத்தக் கூடாது.
- தடை செய்யப்பட்ட, ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பேப்பர், கவரில் பொட்டலமிடக் கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
- பண்டிகை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளுக்கு சீட்டு நடத்துவோர் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
- ஏற்கனவே உரிமம் பெற்றிருந்தால் அதனை புதுப்பித்திருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் தயாரிப்பது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- சமுதாய கூடங்கள், கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர இடங்களில் இனிப்பு, கார வகைகளை தயாரிப்பவர்கள் அதற்கான உரிமம் பெறவேண்டும்.
- உணவுப் பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோர் கண்டிப்பாக பயிற்சி, மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும்.
- பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கான விபரச்சீட்டில் தயாரிப்பாளர் முழு முகவரி, உணவு பொருள் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்த தேதி, காலாவதியாகும்நாள், சைவ, அசைவ குறியீடு அவசியம் குறிப்பிட வேண்டும்.
- பால் பொருட்களால் தயாரிக்கும் இனிப்பு வகைகளை, மற்ற இனிப்புகளுடன் கலந்து வைத்திருக்கக் கூடாது. இவற்றை எத்தனை நாட்களுக்குள் உபயோகிக்க வேண்டும் என்பதை லேபிளில் அச்சிட வேண்டும்.
உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தெரிவிக்கலாம். என்று கூறியுள்ளார்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu