மருக்காலம்பட்டியில் 18-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளருக்கு திமுவினர் பிரசாரம்

மருக்காலம்பட்டி பகுதியில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு18-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் லதா தாமரைச்செல்வன் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு ஆதரவாக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மருக்காலம்பட்டி கிராமத்தில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர் ஆகியோர் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அப்போது மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாடான் மாது, தங்கமணி, தனேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சித்தார்த்தன், தனபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!