மக்களை திசை திருப்பவே ரெய்டு : முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

மக்களை திசை திருப்பவே ரெய்டு : முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்,   கே.பி.அன்பழகன் பேசினார்.

மக்களை திசை திருப்பவே, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் பேசியதாவது: சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளது. சொன்னதை எதையும் நிறைவேற்ற வில்லை. நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள், ஆனால் ரத்து செய்ய வில்லை.

மக்களை திசை திருப்பவே முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதை கண்டித்தும், வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் நடைபெறும் போராட்டத்தை அனைவரும் முழு முயற்சி யோடு வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story