அம்பத்தூர் அருகே மளிகை, பெட்டி கடைகளில் குட்கா விற்ற நபர் கைது

அம்பத்தூர் அருகே மளிகை, பெட்டி கடைகளில் குட்கா விற்ற நபர் கைது
X
அம்பத்தூர் அருகே மளிகை மற்றும் பெட்டி கடைகளில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அம்பத்தூர் அருகே பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளுக்கு குட்கா சப்ளை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர் சுற்று வட்டார இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக அமைந்தகரை காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. இத்தகலின் பேரில் போலீசார் மாறுவேடத்தில் அமைந்த கரையில் உள்ள ஒரு பெட்டி கடையில் தூரத்தில் இருந்து கண்காணித்தனர்.

அப்போது அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பெட்டி கடையில் குட்கா பொருட்களை கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றபோது. போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது. அவர் பெயர் முகமத் ஷஃபியுல்லாஹ் (வயது 32) இவர் குடோன் ஒன்று வாடகைக்கு எடுத்து அதில் பெரிய அளவில் குட்கா வாங்கி சென்னை அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம், செங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடைகளில் மொத்த விலையில் விற்று வருவது தெரியவந்தது.

மேலும் அவர் மறைத்து வைத்து விற்பனை செய்யும் குடோனில் சென்று சோதனை நடத்தியதில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் 98 கிலோ குட்கா பொருள் இருந்தது தெரியவந்தது அவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
why is ai important in business