புழல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, மகன், தாய் கைது

புழல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, மகன், தாய் கைது
X
புழல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தை உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.

புழல் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் மூவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தை சேர்ந்த சந்திரன் ( வயது 53), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயஸ்ரீ ( வயது 35) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சந்திரனின் மகன் பரமேஸ்வரன் (வயது 24)

ஜெயஸ்ரீயின் 15 வயது மகள்,ஜெயஸ்ரீ ஆகிய 4பேரும் கடந்த சில வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.சிறுமி 9ஆம் வகுப்பு படித்து இடையில் நின்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை தாயின் 2வது கணவரும், அவரது மகனும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக காவல் கட்டுப்பட்டறைக்கு புகார் சென்றுள்ளது. இந்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்ததில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்திரன்,பரமேஸ்வரன் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஜெயஸ்ரீ ஆகிய மூவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பராசிட்டமோல் அதிகப்படியாக பயன்படுத்தும் போது எதிர்பாராத ஆபத்துகள் – புதிய ஆய்வு எச்சரிக்கைகள்